செத்துப்போன நெட்வொர்க்... பாலூற்றிய நெட்டிசன்கள்... ஏர்செல் பரிதாபங்கள்!
நாடு முழுவதும் ஏர்செல் இணைப்பில் இருந்து மற்றவர்களுக்கும் தொடர்புக் கொள்ள முடியவில்லை. மற்ற தொலைத்தொடர்ப்பு இணைப்புகளிலிருந்தும் ஏர்செல்லுக்கு கால் செல்வதில்லை.
90% ஏர்செல் இணைப்புகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏர்செல் வாடிக்கையாளர்களின் புலம்பல் சத்தம் ஒருபக்கம் இருந்தாலும் நெட்டிசன்களின் சேட்டைகள் மற்றொரு பக்கம் ஆர்ப்பறிகின்றனர்.
இந்தியாவின் 6வது மிகப்பெரிய செல்போன் சேவை நிறுவனமான ஏர்செல் சிக்னல் கடந்த சில வாரங்களாக தடைப்பட்டது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே நேற்று அதன் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது. சென்னையிலும் பல இடங்களில் ஏர்செல் சிக்னல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று 90% ஏர்செல் இணைப்புகள் இயங்காது என தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், செத்துபோன ஏர்செல் நெட்வொர்க்குக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாலூற்றி வருகின்றனர்.
நீ முடங்காமா இருந்தாலும் முடங்காத மாதிரி தானாடா இருப்ப?
ஜியோ இன்னும் எத்தன கம்பெனிகளோட ஜோலிய முடிக்கப் போகுதோ?
ஏர்செல்லுக்கு இறுதி அஞ்சலி, குட் பை ஏர்செல் என ஏர்செல் நிறுவனத்தை மீம்ஸ்களால் வருத்துக் கொண்டிருக்கின்றனர்