வாடிய முகம், சோர்வான தோற்றம்.. என்ன ஆனது செந்தில் பாலாஜிக்கு?

புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிபுதிய தலைமுறை

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை 7ஆவது முறையாக  நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது. 

சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் ஏற்படவே அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகே  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து தெரியவரும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com