\
சசிகலா பதவி ஏற்பு விழாவுக்காக அளித்த பாதுகாப்பு வாபஸ்

சசிகலா பதவி ஏற்பு விழாவுக்காக அளித்த பாதுகாப்பு வாபஸ்

சசிகலா பதவி ஏற்பு விழாவுக்காக அளித்த பாதுகாப்பு வாபஸ்
Published on

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் சசிகலா பதவியேற்பு விழாவுக்காக அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை முதலமைச்சர் ஆக்குவதற்கான எற்பாடுகள் நடைபெற்றன. முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். இதனையடுத்து சசிகலாவை முதலமைச்சராக்க சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

சென்னை பல்கலைக்கழக வளாகம் முழுவதும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை தனித்தனியாக சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநரிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com