திருமங்கலம்: பூசாரியின் அருள்வாக்கால் கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்

திருமங்கலம்: பூசாரியின் அருள்வாக்கால் கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்
திருமங்கலம்: பூசாரியின் அருள்வாக்கால் கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்
திருமங்கலம் அருகே உள்ள கருப்பசாமி கோயிலுக்குள் நுழைய காலம் காலமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், பூசாரியின் அருள்வாக்கால் முதன்முறையாக அம்மக்கள் கோயிலுக்குள் சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபர் பூசாரியாக உள்ளார். ஆனால், கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.
இந்நிலையில் அனைத்து சாதியினரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புப்படி, கோயிலுக்குள் செல்ல அனுமதி கேட்டு பட்டியலினத்தைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால், சாமியிடம் குறிகேட்க அவர்கள் முடிவு செய்தனர்.
அப்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த கோயில் பூசாரியான சின்னசாமிக்கு திடீரென அருள் வந்து, காலம் காலமாக இருக்கும் வழிமுறையை மீறி கோயிலுக்குள் வருபவர்களை தான் பார்த்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து கோயிலுக்கு செல்பவர்களை தெய்வம் பார்த்துக் கொள்ளட்டும் என கிராம மக்கள் தெரிவிக்க, அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com