\
மழையால் காட்டு யானைகளை விரட்டும் பணி தொய்வு: ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்

மழையால் காட்டு யானைகளை விரட்டும் பணி தொய்வு: ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்

மழையால் காட்டு யானைகளை விரட்டும் பணி தொய்வு: ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்
Published on
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தொடர்ச்சியாக வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானைகளை ட்ரோன் கேமரா உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர் அருகேயுள்ள ஆமைகுளம், புளியம்பாறை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை 2 காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியதால், அவற்றை விரட்டக் கோரி பாதிக்கபட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணி 5 நாட்களாக தொடர்கிறது.
குறிப்பிட்ட யானைகள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதாலும், மூடுபனி மற்றும் மழை காரணமாகவும் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனால், ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி அந்த யானைகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com