விடுமுறை தினம்: தீபாவளி ஷாப்பிங் இன்று களைகட்டும் என எதிர்பார்ப்பு

விடுமுறை தினம்: தீபாவளி ஷாப்பிங் இன்று களைகட்டும் என எதிர்பார்ப்பு
விடுமுறை தினம்: தீபாவளி ஷாப்பிங் இன்று களைகட்டும் என எதிர்பார்ப்பு
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வார விடுமுறை நாள் என்பதால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தீபாவளி ஷாப்பிங்கில் இன்று களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புத்தாடை வாங்க நேற்றே மக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். மேலும் வீட்டுச் சாதனங்கள், அலங்கார விளக்குகள், இனிப்புகள், பலகாரங்கள் செய்வதற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வாடிக்கையாளர்களுக்கும், கடைக்காரர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதேபோல கோவை, மதுரை, நெல்லை, திருச்சியிலும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளிலும் சாலையோர கடைகளிலும் மக்கள் நேற்று திரண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேலும் அதிகம்பேர் ஷாப்பிங் செய்வார்கள் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com