\
ரூ.630 கோடி நன்கொடை கொடுத்த தமிழர்

ரூ.630 கோடி நன்கொடை கொடுத்த தமிழர்

ரூ.630 கோடி நன்கொடை கொடுத்த தமிழர்
Published on: 

கடந்த ஆண்டு அதிக நன்கொடை அளித்த தொழிலதிபர்களில் ஹெச்.சி.எல் நிறுவன அதிபர், ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு, 630 கோடி ரூபாயை பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஹுருன் ஆய்வு நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

தனது ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பாக மருத்துவம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு இவ்வளவு தொகையை, நன்கொடையாக வழங்கியுள்ள அவர், தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 313 கோடி ரூபாயும் ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் முகேஷ் அம்பானி 303 கோடி ரூபாயும், ஆதித்யா பிர்லா குரூப் சேர்மன் குமார் மங்கலம் பிர்லா, 21 கோடி ரூபாயும் கடந்த ஆண்டு நன்கொடை வழங்கியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com