மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள்

மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள்

மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள்
Published on

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே அரசு மதுக்கடையை முற்றுகையிட்ட கிராம மக்கள், மதுக் கூடத்தை சூறையாடினர்.

நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டதால், தென்காசி அருகே பூலாங்குளம் - நெல்லையப்பபுரம் இடையே உள்ள மதுக்கடையில் காலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் குவிந்துள்ளனர். நண்பகல் 12 மணியளவில் மதுக்கடை திறக்கப்பட்டதுமே, திடீரென இரு கிராம மக்களும் போராட்டத்தில் இறங்கினர். மதுக்கடையை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மதுக்கடைக்கு பூட்டுப் போட்டனர். பதற்றம் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளம் வட்டாட்சியர் நேரில் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com