\
யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிப்பு : சென்னையில் இருவர் கைது

யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிப்பு : சென்னையில் இருவர் கைது

யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிப்பு : சென்னையில் இருவர் கைது
Published on

சென்னையில் யூடியூப் பார்த்து மதுபானம் தயாரித்த ஐடி ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராகுல் (22). இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான வினோத் ராஜ் (26) என்பவர் மார்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் கொண்டவர்கள் எனத் தெரிகிறது.

ஊரடங்கால் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் இருவரும் குடிக்க முடியாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இணைந்து யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி திராட்சை, நாட்டு சர்க்கரை, பட்டை இலை மற்றும் சில பொருட்களை வைத்து மதுபானம் தயாரிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர். அத்துடன் அவக்ரள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com