தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி அடியோடு சரிவு

தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி அடியோடு சரிவு
தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி அடியோடு சரிவு

தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரம் அடியோடு சரிந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, ஒட்டுமொத்த காற்றாலை மின்சாரம் 100 மெகாவாட் அளவுக்கே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான காற்றாலைகள் அமைந்துள்ளன. குறிப்பாக, நெல்லை மாவட்டம் காவல்கிணறு ,ஆவரை குளம், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காற்றாலைகள் உள்ளன.

ஜூன் முதல் அக்டோபர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த சீசன் நேரத்தில் காற்றாலை மின்சாரம் நாளொன்றுக்கு 3,000 முதல் 4,000 மெகாவாட் வரை கிடைக்கும். தற்போது சீசன் முடிவடைந்த நிலையில் காற்றின் வேகம் அடியோடு குறைந்துள்ளது. இதன் காரணமாக காற்றாலை மின்சாரம் கடந்த ஒரு வார காலமாக 300 மெகாவாட்டுக்கு குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து: ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் பலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com