
சென்னை விம்கோ நகர் பணிமனையில் இருந்து செல்லும் உயர் மின்னழுத்த கேபிளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விம்கோ நகர் பணிமனை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் கோளாறை சரிசெய்ய 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் விம்கோ நகருக்கு செல்லுமாறு மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
இந்த மின் விநியோக கோளாறை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இந்தக் கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விரைந்து வழக்கம் போல் மெட்ரோ ரயில் சேவை தொடரும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது விம்கோ நகர் - சுங்கச்சாவடி இடையே 18 நிமிட இடைவெளியில் ஒருவழிப்பாதையாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.