தமிழ்நாடு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா? - எடப்பாடி பழனிசாமி
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா? - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என பொதுமக்களுக்கு ஐயம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக என்றாலே தேர்தல்களில் தில்லுமுல்லு செய்யும் கட்சி எனக் கூறினார்.
திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி நகைக்கடன் ரத்து விவகாரத்தில் குழப்பம் நிலவுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.