\
ஊரடங்கு நீட்டிப்பா? - தமிழ்நாடு முதல்வர் இன்று ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா? - தமிழ்நாடு முதல்வர் இன்று ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா? - தமிழ்நாடு முதல்வர் இன்று ஆலோசனை
Published on: 

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் மருத்துவக்குழு, சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. மருத்துவக்குழுவுடனான ஆலோசனைக்கு பிறகு சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை செய்கிறார். விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் கோரொனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை அதிகரித்து ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com