விட்டுக் கொடுக்காத ஓபிஎஸ், பிடிவாதம் காட்டிய இபிஎஸ்.. என்ன நடந்தது நீதிமன்றத்தில்?

விட்டுக் கொடுக்காத ஓபிஎஸ், பிடிவாதம் காட்டிய இபிஎஸ்.. என்ன நடந்தது நீதிமன்றத்தில்?
விட்டுக் கொடுக்காத ஓபிஎஸ், பிடிவாதம் காட்டிய இபிஎஸ்.. என்ன நடந்தது நீதிமன்றத்தில்?

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்...

கடும் வாக்குவாதம், ஆலோசனை, சந்திப்பு, போஸ்டர் யுத்தம், அணி தாவல் இவைகளுக்கு மத்தியில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது அந்த நீதிமன்ற காட்சி உங்கள் கண்முன்னே...

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் என்ன?

அதிமுக கட்சியின் விதிகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து மாற்றி அமைக்க அதிகாரம் உள்ளது.

பொதுக்குழுவில் வைக்கப்பட உள்ள முன்மொழிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்னரே பொதுக்குழுவில் வைக்க முடியும்.

பொதுக்குழு தான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரியானது தான். ஆனால், அங்கு என்ன நடக்க வேண்டுமென முடிவெடுப்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் சேர்ந்தது.

நேற்று அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து அனுப்பி விட்டேன். வேறு அஜெண்டா ஏதும் இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.

வழக்கமான பணிகள், பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பொதுக்குழுவில் நடக்கலாம் என்ற மனநிலையில் செல்ல முடியாது. என்னென்ன நடக்கப்போகிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டே பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியும்

ஒருங்கிணைப்பாளருக்கு தெரியமால் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது என்ற வழக்கறிஞரை இடைமறித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திடீரென பொதுக்குழுவில் எந்த விவகாரத்தையாவது எழுப்ப வேண்டுமென யாராவது சொன்னால் என்ன செய்வது என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ஒரு விவகாரத்தை முன்மொழிவது என்பது வேறு. அதனை எழுப்புவது என்பது வேறு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதியில்லை. வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே மற்றொருவரை நியமிக்க முடியும் கொடுத்த தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நாளை கொண்டு வரக்கூடாது என வாதிட்டனர்.

இதையடுத்து நடைபெற்ற இபிஎஸ் தரப்பு வாதங்களை இங்கு பார்க்கலாம்... பெரும் எதிர்பார்ப்புடன் பொதுக்குழுவில் கலந்துகொள்ள சென்னையை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். இவை நடக்க வேண்டும், இவை நடக்கக்கூடாது, இவற்றை ஆலோசிக்கலாம், இவற்றை ஆலோசிக்கக் கூடாது என தற்போதைய நிலையில் கூறக்கூடாது. அதை முன்கூட்டியே முடிவு செய்யக்கூடாது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும் கூட்டம் நடத்தலாம், கட்சிவிதிகளில் மட்டும் திருத்தம் செய்யக்கூடாது என வலியுறுத்துகின்றனர் என்றார்.

அதிமுகவில் உறுப்பினரே இல்லாத சுரேந்தர் பழனிசாமி வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராககரிக்க வேண்டும் என வாதம் நடைபெற்றது. தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ளது. 

இதையும் படிக்கலாம்: அதிமுக பொதுக்குழு கூட்டம்: இப்போதே குவிந்த போலீசார்.. கட்டுப்பாடுகள் என்னென்ன? https://bit.ly/3HHkubc

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com