துறை மாற்றம் செய்துவிட்டால் ராஜகண்ணப்பன் புனிதராகிவிடுவாரா? - தினகரன் கேள்வி

துறை மாற்றம் செய்துவிட்டால் ராஜகண்ணப்பன் புனிதராகிவிடுவாரா? - தினகரன் கேள்வி
துறை மாற்றம் செய்துவிட்டால் ராஜகண்ணப்பன் புனிதராகிவிடுவாரா? - தினகரன் கேள்வி

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் திராவிட மாடலா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?



சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?!

ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?" என தெரிவித்துள்ளார்

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் துறைகளை மாற்றுவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்றபின்பு நடக்கும் முதல் அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரைக்கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கு வழங்க வெளியில் இருந்து இனிப்புகளை வாங்குவதாக ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com