\
சந்தானத்தின் படங்கள் வெளியாக விடமாட்டோம்: இந்து மக்கள் கட்சி

சந்தானத்தின் படங்கள் வெளியாக விடமாட்டோம்: இந்து மக்கள் கட்சி

சந்தானத்தின் படங்கள் வெளியாக விடமாட்டோம்: இந்து மக்கள் கட்சி
Published on

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நடிகர் சந்தானம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அவரது திரைப்படங்கள் வெளிவர விடமாட்டோம் என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் தாக்கிவிட்டதாக, நடிகர் சந்தானம் மீது பில்டர் ஒருவர் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வளசரவாக்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் இணைந்து, குன்றத்தூர் அடுத்துள்ள மூன்றாம் கட்டளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சந்தானம் திட்டமிட்டதாக தெரிகிறது. அதற்காக, அவருடைய பங்கு பணத்தையும் சந்தானம் சண்முகசுந்தரத்திடம்‌ கொடுத்துள்ளார்.

கட்டடம் கட்டும் திட்டத்தை கைவிட்டதால், தான் கொடுத்த தொகையை சந்தானம் கேட்டுவந்ததாக கூறப்படுகிறது. ஒரு பகுதி பணத்தை கொடுத்துவிட்டு, மீத பணத்தை கொடுக்காமல் சண்முகசுந்தரம் அலைக்கழித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சந்தானம் தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பானதாக கூறப்படுகிறது. அதில், சண்முகசுந்தரமும் மற்றும் அவரது நண்பரும் காயமடைந்தனர். நடிகர் சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிற‌து.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com