ட்ரம்ப் காட்டிய அதிரடி.. கவலையில் கரூர்!
இந்திய அளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூர் முக்கிய இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 9 ஆயிரம் கோடி வீட்டுக்கு உபயோக ஜவுளி பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 6 ஆயிரம் கோடி அளவிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவிற்கு மட்டுமே சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி பொருள்கள்
கரூரிலிருந்து ஏற்றுமதி ஆகின்றன.
இந்நிலையில் இறக்குமதி பொருட்களுக்கான வரியை கூடுதலாக
26 சதவிகிதம் உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால் கரூரில் ஏற்றுமதி பாதித்து தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்கிறார் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன்.
பரஸ்பர வரி விதிப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்,
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளி உள்ளிட்ட அனைத்து பொருள்களுக்கான ஏற்றுமதி வரி குறையும் என்கிறார்கள் ஜவுளித்துறையினர்.
400க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள், 3 ஆயிரம் கோடி ஜவுளி ஏற்றுமதி, 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மத்திய அரசின் கையில் உள்ளது.