\
காய்ச்சலைக் கண்டறிய வல்லுநர் குழு: அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சலைக் கண்டறிய வல்லுநர் குழு: அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சலைக் கண்டறிய வல்லுநர் குழு: அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னையில் பரவி வரும் காய்ச்சலை கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சலால் பாதிக்கப்படுவோரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும், மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com