Himanta Biswa and EPSPT Desk
தமிழ்நாடு
பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணையுமா? அசாம் முதல்வர் மூலம் மறைமுக பேச்சுவார்த்தை?
மீண்டும் அதிமுகவை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, அசாம் முதல்வர் மூலம் அதிமுகவை தொடர்புகொள்ள முயற்சித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
NDA கூட்டணியில் மீண்டும் அதிமுகவை இணைப்பதற்கான முயற்சியில் பாஜகவின் பல தலைவர்கள் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்கட்டமாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கோவையில் உள்ள தொழிலதிபர் மூலம் பேச முயற்சித்து வருவதாகவும், ஆனால் தற்போது வரை அதிமுகவிடமிருந்து எந்தவிதமான நேர்மறையான பதிலும் வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Admk vs Bjp
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வேலூரில் நடைபெற்ற அசாம் பவன் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அசாம் முதல்வர், கோவையில் உள்ள தொழிலதிபர் மூலம் அதிமுக தலைவர்களுக்கு தூது விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.