வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை - வனத்துறை எச்சரிக்கை

வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை - வனத்துறை எச்சரிக்கை
வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை - வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பாதையில் யானைகள் இடம்பெயரும் வழித்தடத்தில் நின்று இடையூறு செய்யும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. 

மனித விலங்குகள் மோதலை தடுக்கவே இது போன்ற சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதே போல அந்த பகுதியில் ஆபத்தான இடங்களில் செல்பீ எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஈரோடு சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பாதையில் யானைகள், காட்டு எருமைகள், மான்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன. பல நேரங்களில் இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைப்பகுதிகளை கடக்கும். அந்த சமயங்களில் சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து இறங்கும் சுற்றுலா பயணிகள், அவற்றுடன் புகைப்படம் எடுப்பதுடன், அவற்றை அச்சுறுத்தும் பல நடவடிக்கைகளில் இறங்குவதாக புகார் வந்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com