\
மண்மேட்டில் சறுக்கிச் சென்ற காட்டு யானைகள் - பரவசத்துடன் படமெடுத்த சுற்றுலா பயணிகள்

மண்மேட்டில் சறுக்கிச் சென்ற காட்டு யானைகள் - பரவசத்துடன் படமெடுத்த சுற்றுலா பயணிகள்

மண்மேட்டில் சறுக்கிச் சென்ற காட்டு யானைகள் - பரவசத்துடன் படமெடுத்த சுற்றுலா பயணிகள்
Published on

குன்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு கொட்டப்பட்டுள்ள மண்ணில் சறுக்கிச் செல்லும் யானைகளை அவ்வழியாக பயணித்தோர் படமெடுத்து மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 2 குட்டிகளுடன் உலாவந்த 5 காட்டு யானைகள் கீழ் பகுதியில் உள்ள அருவியில் தண்ணீர் குடிக்கச் சென்றது, இந்நிலையில், யானைகள் செல்லும் வழி தடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாகத்திற்காக எடுத்த மண்ணை கொட்டியிருந்தனர்.

இதனால், யானைகள் அங்கிருந்து செங்குத்தான பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்கி மலை ரயில் பாதை வழியாக நீரோடைக்குச் சென்றது, இந்த காட்சிகளை நெடுஞ்சாலை வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன் படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com