\
காட்டு யானைகள் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

காட்டு யானைகள் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

காட்டு யானைகள் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு
Published on

கோவையில் காட்டு யானை தாக்கியதில் 50 வயது பெண் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த தவசி என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் பட்டியார்கோவில்பதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இன்று காலை தவசியின் மனைவி சாரதா வனத்தையொட்டிய பகுதிக்கு காலைக் கடன்களை முடிக்கச் சென்றுள்ளார். அப்போது, ஒற்றை காட்டு யானை தாக்கியதில் சாரதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் மாவாநல்லா பகுதியில் நள்ளிரவு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com