\
வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் போராடும் காட்டு யானைகள்: மக்கள் அவதி

வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் போராடும் காட்டு யானைகள்: மக்கள் அவதி

வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் போராடும் காட்டு யானைகள்: மக்கள் அவதி
Published on

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை, இரண்டு வீடுகள் மற்றும் கார் ஒன்றை சேதப்படுத்தியது. 

நீலகிரி மாவட்டம் தேவாலா, ஹட்டி, கைதகொல்லி உள்ளிட்ட கிராமங்களில் தினந்தோறும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்துவிடுகின்றனர். அவை விவசாயப் பயிர்களை சேதம் செய்வது வழக்கமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு கைதகொல்லி மற்றும் ஹட்டி கிராமங்களுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வெளியேற வழித் தெரியாமல் அங்குமிங்குமாக மிரண்டு ஓடியது. 

ஓடும்போது ஹட்டி பகுதியிலிருந்த இரண்டு வீடுக‌ளைச் சேதப்படுத்திய காட்டு யானை, கார் ஒன்றையும் உடைத்தது. அதிருஷ்டவசமாக வீட்டிற்குள் இருந்த குழந்தைகள் உள்பட அனைவரும் உயிர் தப்பியிருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காட்டு யானையை வனத்திகுள் விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் இரவு தூக்கத்தை இழந்து சிரமப்பட்டனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com