சேலம் : சொத்து தகராறில் பட்டப்பகலில் மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி; அதிர்ச்சி சம்பவம்!

ஆத்தூரில் சொத்துக்காக மகனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கருப்பண்ணன்
உயிரிழந்த கருப்பண்ணன் PT WEB

ஆத்தூர் செய்தியாளர் - ரவி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (67). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ராஜா என்ற மகனும் சந்திரா மகளும் உள்ளனர். மகன் ராஜாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பிரிந்து சென்றதால். 2வது மனைவியுடன் வசித்து வருகிறார். மகள் சந்திராவுக்குத் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

 ராஜா
ராஜா

இந்தநிலையில், ராஜாவின் தந்தை கருப்பண்ணன் தனது சொத்தை, ராஜாவின் முதல் மனைவியின் மகன் சங்கர் என்பவருக்கு எழுதி வைக்க முடிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தந்தை கருப்பண்ணனிடம் தகராறு செய்துள்ளார்.

உயிரிழந்த கருப்பண்ணன்
தெலங்கானா: குழாய்நீரில் வீசிய துர்நாற்றம்..குடிநீர் தொட்டியை திறந்தபோது இறந்து கிடந்த 30 குரங்குகள்!

மகனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்த மனைவி

பின்னர், கருப்பண்ணனின் மனைவி மாரியம்மாளும் ராஜாவும் சேர்ந்து சொத்தை எழுதி வைக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சடலமாக கருப்பண்ணன்
சடலமாக கருப்பண்ணன்

இது குறித்துத் தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மாரியம்மாள், ராஜா இருவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த கருப்பண்ணன்
மதுரை: தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் மீட்பு
சோகத்தில் நிற்கும்  ஊர் மக்கள்
சோகத்தில் நிற்கும் ஊர் மக்கள்

பட்டப் பகலில் நடந்த கொலை 

சொத்து தகராறில் பட்டப் பகலில் கணவனை, மகனுடன் சேர்ந்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், "வாழ்ந்து காட்டுவோம் வாழ்ந்து காட்டுவோம்" என்ற விவாத நிகழ்ச்சியில் இறந்து போன, கருப்பண்ணன் அவரது மனைவி மாரியம்மாள் மகன் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com