\
கணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்

கணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்

கணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்
Published on

கிருஷ்ணகிரியில் முறையற்ற உறவு காரணமாக கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜலிங்கம். இவரது மனைவி சோனியா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சோனியா பலருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ‌அதை ராஜலிங்கம் கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலிப்படையினர் மூலம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சோனியா. அதன்படி கணவர் இல்லாத நேரத்தில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை வரவழைத்து, தனது வீட்டிற்குள் மறைந்திருக்கச் செய்துள்ளார். பின்னர், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ராஜலிங்கத்தின் கழுத்தை நெரித்து கூலிப்படையினர் கொலை செய்துள்ளனர்.

கொலை நடந்த போது அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்துவிடாமல் வாயிலில் நின்று காவல் காத்திருக்கிறார் சோனியா. கூலிப்படையினர் சென்றவுடன் ராஜலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சோனியா நாடகமாடியுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசாரிடம் ராஜலிங்கத்தின் மூத்த மகன் அம்மா சோனியா நாடகமாடுவதை கூறியுள்ளார். இதனையடுத்து சோனியா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com