கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள தில்லை நகர் பகுதியை சேர்ந்த தம்பதி விக்டர் - அபய ஐஸ்வர்யா. இவர்களுக்கு 8 வயது மகன் இருக்கிறான். விக்டர், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட சண்டையில் கீழே தள்ளிவிடப்பட்ட விக்டர் மயங்கியதாகவும் கூறி ஐஸ்வர்யா அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். விக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யாவிற்கும், குணசேகரன் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து விக்டரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com