மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10ஆண்டு சிறை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10ஆண்டு சிறை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10ஆண்டு சிறை
Published on

ஈரோட்டில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. பொக்லைன் இயந்திர ஓட்டுனரான இவர் சிவகங்கையை சேர்ந்த சிவசங்கரி என்பவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தொழில் நிமிர்த்தமாக ஈரோடு வந்த அவர்கள் திண்டல் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் திருப்பதிக்கு குடிப்பழக்கம் அதிகரித்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் சிவசங்கரி கணவருடன் ஏற்பட்ட தகறாறில் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு தொடந்தனர். மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக திருப்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com