திருத்துறைப்பூண்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன். இவர் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் அடிக்கடி தகறாறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மணலியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். இன்று அதிகாலை இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்ட நிலையில், ஐயப்பன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டியிருக்கிறார். சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில், தப்பியோடிய ஐயப்பனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.