\
வாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி!

வாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி!

வாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி!
Published on

சென்னையில் மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவாகிய கணவரை உறவினர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாத்(36). இவருடைய மனைவி உஷா(30). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் அதே பகுதியில் மாவு கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு உஷாவின் சகோதரி செல்போனில் அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனை எடுத்து பேசிய கணவர் பிரசாத், உஷா தூங்குவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். நேற்று மீண்டும் அவர் தொடர்பு கொண்டபோது, போனை ஆந்திராவில் உள்ள பிரசாத்தின் உறவினர் எடுத்து பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உஷாவின் சகோதரி, கிண்டியில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் விவரத்தை கூறி தங்கையின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

அதன்படி அவர்கள் சென்று பார்த்தபோது அங்கு உஷா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிரசாத்துக்கும் உஷாவுக்கும் வழக்கம்போல் சண்டை வந்ததும், ஆத்திரத்தில் பிரசாத் வாஷிங்மிஷினில் இருந்த டியூப்பை எடுத்து மனைவி உஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தனது மகளை ஆந்திராவில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பிரசாத் தலைமறைவாகினார்.

இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவரது உறவினர்களே பிரசாத்தை கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com