கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு

கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு

கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு
Published on

சென்னையில் குடும்பத் தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை மனைவி ஊற்றியதில் காயம் அடைந்த சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழந்தார். 

சென்னை திருவிக நகரின் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா. இவருடைய மனைவி நஸ்ரின். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதியன்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த சூடான எண்ணையை நஸ்ரின் கணவன் மீது ஊற்றியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த உபயதுல்லா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மனைவி நஸ்ரினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com