மேட்டூர் | குழந்தையை கொல்ல முயன்ற தந்தை.. தற்காப்புக்காக தாய் செய்த செயல்!

மேட்டூர் அருகே மதுபோதையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்ற கணவரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சக்தி
கொலை செய்யப்பட்ட சக்திpt desk

சேலம் மேட்டூர் கொசவன்கரடு பகுதியைச் சேர்ந்த சக்தி. சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வரும் இவர், அடிக்கடி குடித்து விட்டு மனைவி மணிமுடியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இரவும் வழக்கம்போல் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

சக்தி - மணிமுடி வீடு
சக்தி - மணிமுடி வீடுpt desk

அப்போது போதை மயக்கத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி மற்றும் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மீதும் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்துள்ளார். சுதாரித்துக் கொண்ட மனைவி மணிமுடி, மண்ணெண்ணெய் கேனை தட்டி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி, வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து அவரை தாக்க முயற்சித்துள்ளார்.

அப்போது மணிமுடி தற்காப்புக்காக கடப்பாரையை பிடுங்கி கணவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சக்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிமுடியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்காப்புக்காக மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com