தமிழ்நாடு
தடுமாறி விழுந்த பைக் : கணவர் கண் முன்னே உயிரிழந்த மனைவி
தடுமாறி விழுந்த பைக் : கணவர் கண் முன்னே உயிரிழந்த மனைவி
இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி கம்ருதீன் மற்றும் பாத்திமா கனி. இவர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது.
அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த தனியார் பேருந்தின் பின் சக்கரம், பாத்திமா மீது ஏறியது. இந்த விபத்தில் கணவர் கண் முன்னே அவர் உடல்நசுங்கி உயிரிழந்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.