\
பைக் மீது டிராக்டர் மோதிய விபத்து - கணவர் கண் முன்னே மனைவி உயிரிழப்பு

பைக் மீது டிராக்டர் மோதிய விபத்து - கணவர் கண் முன்னே மனைவி உயிரிழப்பு

பைக் மீது டிராக்டர் மோதிய விபத்து - கணவர் கண் முன்னே மனைவி உயிரிழப்பு
Published on

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் மேட்டு காலனியை சேர்ந்த விவசாயி முருகேசன். இவரது மனைவி துலுக்கானம்மாள் (55). இவர்கள் இருவரும் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, எதிர் திசையில் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் அவர்களின் வண்டியில் மோதியிருக்கிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த துலுக்கானம்மாள் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில், கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் முருகேசன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார், உயிரிழந்த துலுக்கானம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் போலீசார் மற்றும் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் உயிரிழந்தவரின் உறவினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com