“சொத்தை அபகரிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கொடுமை”- ஐபிஎஸ் அதிகாரி மீது மனைவி புகார்

“சொத்தை அபகரிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கொடுமை”- ஐபிஎஸ் அதிகாரி மீது மனைவி புகார்
“சொத்தை அபகரிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கொடுமை”- ஐபிஎஸ் அதிகாரி மீது மனைவி புகார்

சொத்தை அபகரிக்க தம்மை மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கொடுமைப்படுத்துவதாக ஐ.பி.எஸ். அதிகாரி மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த அருணா என்பவருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆனந்திற்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனந்த் தற்போது கேரளாவில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு வரதட்சணையாக பெண் வீட்டார் 500 சவரன் நகை மற்றும் 4 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்ததாக தெரிகிறது.

திருமணமாகி 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வரதட்சணை கேட்டு ஆனந்தும் அவரது தாய் மலர்க்கொடியும் தம்மை கொடுமைப்படுத்துவதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அருணா புகார் அளித்தார். சொத்தை அபகரிப்பதற்காக தன்னை மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கொடுமைப்படுத்துவதாக புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் அருணா வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பி.எஸ். அதிகாரி ஆனந்த் மீது ஒரு வாரத்துக்குள் வழக்குப்பதிய உத்தரவிட்டது. எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறிய அருணா தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com