“கணவர் இல்லாமல் வாழமுடியவில்லை” - 2 மகள்களுடன் தற்கொலை செய்த மனைவி

“கணவர் இல்லாமல் வாழமுடியவில்லை” - 2 மகள்களுடன் தற்கொலை செய்த மனைவி
“கணவர் இல்லாமல் வாழமுடியவில்லை”  - 2 மகள்களுடன் தற்கொலை செய்த மனைவி

நாகர்கோவில் அருகே கணவன் உயிரிழந்து ஓராண்டு ஆகிய நிலையில் மனைவி தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(32). இவர் கடந்த ஓராண்டிற்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி ராசி (29), மகள்கள் அக்சயா(5), அனியா(3) ஆகியோர் ரஞ்சித்குமாரின் தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். ரஞ்சித்குமாரின் தந்தை ராமதாஸ்(72) கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராசி மனச்சோர்வுடன் காணப்பட்டுள்ளார். கணவன் மீதான அன்பு காரணமாக சோகத்தில் இருந்த அவர் நேற்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “கணவனை பிரிந்து வாழ இயலவில்லை” என்பது போன்று பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு தனது இரண்டு மகள்களுக்கும் தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாத நிலையில் சந்தேகமடைந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து தகவலறிந்த நேசமணிநகர் போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் ராசி எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில், “என்னை மன்னித்து விடுங்கள். ஒரு வருடத்திற்கும் பிறகுதான் இந்த முடிவை எடுக்கிறேன். என்னையும் என் குழந்தைகளையும் எனது கணவரிடம் வழி அனுப்பி வையுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

கணவன் உயரிழந்து ஓராண்டு ஆன நிலையில் மனைவி தனது இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com