\
சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
Published on
சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை பொழிந்தது. மாலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், கே.கே.நகர், வளசரவாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களைப் பொறுத்தவரையில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலுக்கு 5 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com