கடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ! ஊட்டி போல இருக்கும் சென்னை

கடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ! ஊட்டி போல இருக்கும் சென்னை
கடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ! ஊட்டி போல இருக்கும் சென்னை

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அட சென்னையில எப்பவும் வெயில் கொளுத்தும்பா என சொன்னவர்களே இப்போது, என்னப்பா இப்படி குளுரா இருக்கு என சொல்கிறார்கள். பொதுவாக தமிழகத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலம். கார்த்திகை மாதம் தொடங்கி தை வரை குளிர் இருக்கும். பின்பு, படிபடியாக குளிர் குறைந்து வெயில் அடிக்க தொடங்கும். ஆனால் முன்பெல்லாம் தாங்கக் கூடிய அளவிலேயே குளிர் இருக்கும், ஆனால் இந்தாண்டோ குளிரால் மக்கள் பெரிதும் அவதியடைகிறார்கள்.

தமிழகத்தில் மலைவாசத்தலமான வால்பாறையில் வானிலை 3.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஊட்டியில் 4.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மூணாரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இந்த மலைவாசத்தலங்கள் கிட்டத்தட்ட உறைந்தே போய்விட்டன. மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஊட்டி, வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் காலையில் பனியால் உறைந்த இடங்களை பார்க்கலாம். தேயிலை செடிகள் உறை பனியால் கருகி போய்விட்டது. இவையாவது மலை சார்ந்த இடங்கள், எப்போதும் குளிராய் இருக்கும் இடங்கள் இப்போது அதிக குளிராய் இருக்கிறது.

சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் இரவு நேரங்களில் 16 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மதுரை, கோவை, திருநெல்வேலி, தர்மபுரி, திண்டுகல் ஆகிய மாவட்டங்களிலும் 15 டிகிரி செல்சியஸ் வானிலையே பதிவாகி இருக்கிறதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வால்பாறை, ஊட்டி, மூணாறில் வரலாறு காணாத குளிர் நிலவுவதாகவும், இன்னும் சில நாள்கள் இந்நிலையே நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பெருநகரங்களிலும் இத்தகைய குளிர் நிலவுவதால் பொது மக்கள், குளிரை போக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எதனால் கடும் குளிர் ?

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது " சென்னை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது ஒட்டுமொத்தம் தமிழகத்திலும் நீடிக்கிறது. இதற்கு ஹை பிரஷர்தான் காரணம். லோ பிரஷர் இருந்தால்தான் நமக்கு மழை வரும். ஹை பிரஷர் அதவாது அதிக காற்றழுத்த சுழற்சி. அப்போதும் மேகங்கள் இருக்காது. காற்றில் ஈரப்பதம் அப்படியே இருக்கும். சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் குளிரை ஈர்த்து காற்று செல்கிறது. இதன் காரணமாகவே அதிக குளிரை உணர்கிறோம். பொதுவாகவே டிசம்பர் மாதம் ஹை பிரஷருக்கான மாதம்தான். இந்நிலை இப்படியே அடுத்த செவ்வாய்க்கிழமை வரை தொடரும்" என தெரிவித்தார் பிரதீப் ஜான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com