5 ஆண்டு கால ஆட்சியை ஆணும்,பெண்ணும் சமமாக ஏன் ஆளக்கூடாது?- ஓபிஎஸ் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

5 ஆண்டு கால ஆட்சியை ஆணும்,பெண்ணும் சமமாக ஏன் ஆளக்கூடாது?- ஓபிஎஸ் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

5 ஆண்டு கால ஆட்சியை ஆணும்,பெண்ணும் சமமாக ஏன் ஆளக்கூடாது?- ஓபிஎஸ் பேச்சால் அதிர்ந்த அரங்கம்
Published on

5 ஆண்டுகால ஆட்சியில், ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஏன் நாட்டை ஆளக் கூடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

சென்னை ரிப்பன் மாளிகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கில் பேசிய அவர், இவ்வாறு கூறினார். தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் அந்த பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தட்டி கேட்கும் நீதிமன்றமாக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஏடிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய அமைச்சர் சரோஜா, ஒவ்வோருவரின் உரிமையை நிலை நாட்டுகிற மனித உரிமை தினம் இன்று என்றும் சுய உதவி குழுக்கள் பொருளாதாரத்திற்காக மட்டுமல்ல, அது மாபெரும் பெண்கள் இயக்கம் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், “பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்களால் தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. இதை சீர்படுத்த வேண்டியது நமது கடமை. மகப்பேறு நிதி உதவி 18000 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியிக்கிறது. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 5000 குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் அந்த பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தட்டி கேட்கும் நீதிமன்றமாக செயல்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை அதிகப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. அரசின் 5 ஆண்டுகள் ஆட்சியில் ஆண்கள் இரண்டரை ஆண்டுகளும், பெண்கள் இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வேண்டும். 5 ஆண்டு ஆட்சியில் 2.5 ஆண்டுகள் பெண்கள் ஏன் ஆளக்கூடாது?. 5 ஆண்டு கால ஆட்சியை ஆணும், பெண்ணும் சமமாக ஏன் ஆளக்கூடாது?. ஆணுக்கு பெண் சமம் என்பதை உருவாக்கினால் சமுதாயத்தில் மாற்றம் உண்டு

இந்த கருத்தரங்கில் பெண்கள் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட ஆலோசனைகளை செயல்படுத்த முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com