தமிழ்நாடு
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பாயக் கூடாது?: உயர்நீதிமன்றம்
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பாயக் கூடாது?: உயர்நீதிமன்றம்
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை குண்டர் சட்டத்தில் ஏன் கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரனுக்கு மாற்ற லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களை தண்டிக்கும் வகையில் தனிதடுப்புச் சட்டம் ஏன் கொண்டுவரக்கூடாது என்று வினவினர்.
ஊழலை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையிடம் என்ன மாதிரியான தொழில்நுட்ப வசிதிகள் உள்ளன, அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட 15 கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.