ஏன் பணியில் இருந்து நீக்கக் கூடாது? செவிலியர்களுக்கு நோட்டீஸ்

ஏன் பணியில் இருந்து நீக்கக் கூடாது? செவிலியர்களுக்கு நோட்டீஸ்
ஏன் பணியில் இருந்து நீக்கக் கூடாது? செவிலியர்களுக்கு நோட்டீஸ்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு உங்களை ஏன் பணியில் இருந்து நீக்கக் கூடாது? என விளக்கமளிக்குமாறு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், செவிலியர் தங்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தை தொடர்கின்றனர். 

செவிலியர் கோரிக்கை தொடர்பாக வரும் 4ம் தேதி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இதனிடையே செவிலியருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கூறியுள்ளார். 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு பொது சுகாதரத்துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்தது ஏன்? என்று அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் உங்களை ஏன் பணியில் இருந்து நீக்கக் கூடாது என்று விளக்கமளிக்குமாறும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com