எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை? - ஸ்டாலின் விளக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை? - ஸ்டாலின் விளக்கம்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை? - ஸ்டாலின் விளக்கம்

சென்னையில் நாளை நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில், பங்கேற்கப்போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்  தம்முடைய பெயரை இடம்பெற செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடைய அருமை பெருமைகளை பரப்புவதை விட திமுகவையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பதையே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முதன்மை இலக்காக கொண்டிருந்தனர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிறைவு விழாவின் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்து கொண்டு அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும் லாப நோக்கத்துடனும் எம்ஜிஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் தமக்கு உடன்பாடில்லை எனக் கூறி இருக்கும் ஸ்டாலின், எம்.ஜி.ஆர் தொடர்பாக முரசொலியில் உங்களில் ஒருவன் பகுதியிலும், அரசு சார்பிலான நூற்றாண்டு மலரிலும் தான் கட்டுரை எழுதி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கருணாநிதி-எம்.ஜி.ஆரின் நட்பு, அதை அரசியலாக்காமல் நாளைய விழாவை எம்ஜிஆர் புகழ்பாடும் விழாவாக கொண்டாட அரசை வலியுறுத்துவதாக ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com