நீட் தேர்வை தவிர்க்கும் சட்டம் ஏன்? அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வை தவிர்க்கும் சட்டம் ஏன்? அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வை தவிர்க்கும் சட்டம் ஏன்? அமைச்சர் விளக்கம்
Published on

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நீட் தேர்வைத் தவிர்த்து தமிழகத்தில் தற்போது உ‌ள்ள நடைமுறையே தொடர்வதற்கான சட்டமுன் வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கான காரணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் விளக்கினார்.

அப்போது அவர், தற்போது மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கை‌ 2006ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் கல்வி நிறுவனங்கள் சட்டத்தின் படி மேல்நிலைக் கல்வித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுவதை சுட்டிக்காட்டினார்.

இளநிலை ப‌ட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு அளவில் அனைத்து மருத்துவக் கல்வி நி‌றுவனங்களுக்கும் பல் மருத்துவக் கல்வி‌ நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதை குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் ஒரே சீரான‌ நுழைவுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்‌புறங்களில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

நுழைவுத்‌தேர்வெழுத பயிற்சி மையங்களுக்கு சென்று தயார் செய்யவேண்டி இருப்பதாகவும், கிராமப்புறங்களில் பயிற்சி மையங்கள் இல்லாததையும் அமைச்சர் குறிப்பிட்டார். போதுமான நிதி வசதி இன்றி அவர்கள் ‌பொருளாதரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்வதாகவும் அமைச்சர் கூறினார்.

பாடத் திட்டம், பாடமுறை மற்றும் ஒரே சீரான நுழைவுத் தேர்வு‌ என்பது சிபிஎஸ்இ மேல்நிலைக் கல்விப் படிப்பிற்காக வகுத்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியத்தால்‌ வகுத்துரைக்கப்பட்ட பாடத்திலிருந்து வேறுபட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்பிற்கான சேர்க்கைக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரவேண்டும் என கொள்கை முடிவு ஒன்றை அரசு எடுத்துள்ளதாகவும், இதற்காக சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முதுநிலை மருத்துவ படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கு ஒரே சீரான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால்‌ கிராம ‌மக்களுக்கும், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இதர மக்களுக்கும் தரப்படும் தரமான உயர் மருத்துவ சிகிச்சைக்கான நோக்கம் பாதிக்கப்பட்டுவிடும் எனவும் அமைச்சர் கூறினார்.

மருத்துவம் மற்றும் பல்‌ மருத்துவத்தில் முதுநிலை‌படிப்புகளுக்குரிய சேர்க்கைக்கான தற்போதுள்ள முறையே தொடரவேண்டும் என்பத‌ற்காக சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com