\
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 'டெங்கு' ஏன் இல்லை? : உயர் நீதிமன்றம் கேள்வி

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 'டெங்கு' ஏன் இல்லை? : உயர் நீதிமன்றம் கேள்வி

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 'டெங்கு' ஏன் இல்லை? : உயர் நீதிமன்றம் கேள்வி
Published on

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான சிகிச்சை சேர்க்கப்படாதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எந்த மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது என்பது குறித்தும், பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் நதி, அடையாறு ஆகியவற்றை சுத்தப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com