\
“சம்பவம் நடந்தவுடன் என்டிஆர்எஃப், ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின்

“சம்பவம் நடந்தவுடன் என்டிஆர்எஃப், ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின்

“சம்பவம் நடந்தவுடன் என்டிஆர்எஃப், ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும்”: மு.க.ஸ்டாலின்
Published on: 

சம்பவம் நடந்த உடனேயே மத்திய பேரிடர் மீட்புப் படையையும், ராணுவப்படையையும் அழைத்திருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடுக்காட்டுப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆழ்துளைக் கிணற்றில் 36 அடியில் இருந்தபோதே குழந்தை சுஜித்தை மீட்டிருக்கலாம்; இந்த சம்பவம் நடந்த உடனேயே மத்திய பேரிடர் மீட்புப் படையையும், ராணுவப்படையையும் அழைத்திருக்க வேண்டும், ஏன் அழைக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com