\
பிற மாநிலங்கள் பெட்ரோல் வரியைக் குறைக்கும்போது தமிழக அரசால் முடியாதா?: டிடிவி தினகரன்

பிற மாநிலங்கள் பெட்ரோல் வரியைக் குறைக்கும்போது தமிழக அரசால் முடியாதா?: டிடிவி தினகரன்

பிற மாநிலங்கள் பெட்ரோல் வரியைக் குறைக்கும்போது தமிழக அரசால் முடியாதா?: டிடிவி தினகரன்
Published on

மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும்போது தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதி அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை வதைக்கும் பெட்ரோல்,டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், அவற்றின் மீதான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க, தற்போது அதனை செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலை. மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும்போது தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா?

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வராமல்,விலைவாசியை எப்படி குறைக்க முடியும்? எனவே,பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com