விஜய் கூட்டத்தில் திடீரென நுழைந்தவர்கள் யார்? தமிழக உளவுத் துறையின் தோல்வி என புகார்!
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கூட்டத்தில் திடீரென நுழைந்தவர்கள் யார் என தவெக தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடந்து என்ன என்பது குறித்து ஓய்வுபெற்ற தனிநீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது விசாரணை நடைபெற்றுவருகிறது. அதுமட்டுமில்லாமல் பாஜக தரப்பில் 8 எம்பிக்கள் அடங்கியகுழு கரூருக்கு வந்து களஆய்வு செய்தது.
இந்நிலையில் 8 பாஜக எம்பிக்கள் அடங்கிய குழு கூட்டத்தில் திடீரென நுழைந்தவர்கள் யார் என தவெக தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழக உளவுத் துறையின் தோல்வி..
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய்பரப்புரை கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த நபர்கள் குறித்து தொண்டர்கள் சந்தேகம் எழுப்புவதாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கரூரில் விஜய் பரப்புரை நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணைமேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் டெல்லி செல்வதற்காக கோவை பீளமேடு விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அனுராக்தாக்கூர், எம்பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர், பரப்புரைக்கூட்டத்துக்கு சற்றும் தொடர்பில்லாத சிலர் தவெகதலைவர் வந்த சில நிமிடங்களில் கூட்டத்துக்குள் புகுந்தது ஏன் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததாக கூறினர்.
தமிழக உளவுத்துறையின்தோல்வியையை இந்த சம்பவம்சுட்டிக்காட்டுவதாகவும் குழுவினர் புகார் தெரிவித்தனர்.