\
“தமிழத்தில் பாஜக தோல்விக்கு மோடி எதிர்ப்பலை காரணமல்ல” - ஆடிட்டர் குருமூர்த்தி

“தமிழத்தில் பாஜக தோல்விக்கு மோடி எதிர்ப்பலை காரணமல்ல” - ஆடிட்டர் குருமூர்த்தி

“தமிழத்தில் பாஜக தோல்விக்கு மோடி எதிர்ப்பலை காரணமல்ல” - ஆடிட்டர் குருமூர்த்தி
Published on

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோற்றதற்கு, மோடி எதிர்ப்பலை காரணம் அல்ல என துக்ளக் பத்திரிகை ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், மக்களவைத் தேர்தலில் அதிமுக அதிகபட்சமாக 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாகவும், அதேசமயம், பாரதிய ஜனதா கட்சி அதிகபட்சமாக மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியுற்றதாகவும் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை உள்ளது உண்மையெனில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து தொகுதிகளிலும் 4 முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருக்க வேண்டும் எனக் கூறியுள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, அவ்வாறு நடைபெறவில்லை எனில், யாருக்கு எதிர்ப்பலை வீசுகிறது என்ற கேள்வியுடன் தமது பதிவை நிறைவு செய்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com