\
ரகுவை கொன்றது யார்? வாசகம் அழிப்பு!

ரகுவை கொன்றது யார்? வாசகம் அழிப்பு!

ரகுவை கொன்றது யார்? வாசகம் அழிப்பு!
Published on

கோவையில் அலங்கார வளைவில் மோதி உயிரிழந்த நிலையில், அவர் உயிரிழந்தற்கு யார் காரணம் என கேள்வியெழுப்பி சாலையில் எழுதப்பட்டிருந்த வாசகம் அழிக்கப்பட்டுள்ளது.

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சிஐடி கல்லூரி அருகில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி, ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில், சாலையை ஆக்கிரமித்து அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டதால்தான், உயிரிழப்பு ஏற்பட்டதாக கோவை மாநகர் முழுவதும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.

‌இதனிடையே விபத்து நடைபெற்ற இடத்தில் வட்டமிட்டு, அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ரகுவைக் கொன்றது யார்? என்பதை ஆங்கிலத்தில் WHO KILLED RAGHU என்று சாலையில் எழுதப்பட்டிருந்தது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த வாசகம் அழிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு செயல்படவில்லை என்று யார் சொன்னது? அரசு எவ்வளவு விரைவாக இயங்குகிறது என அழிக்கப்பட்ட வாசகத்தை பதிவிட்டு இணையவாசிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com