அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் - ஒபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் - ஒபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் - ஒபிஎஸ் குற்றச்சாட்டு
Published on

அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வென்றுள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாக்குவாதம் நடைபெற்றுள்ளது. 

முடிவில் எந்தவித முடிவும் எடுக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றிருந்தனர். அப்போது இரு தரப்பு தலைவர்களின் தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தான் என மெரினாவில் கோஷம் எழுப்பினர். 

தேர்தல் தோல்வி தொடங்கி ஒருவருக்கு ஒருவர் இரு தரப்பினரும் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர். தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதியிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்; எப்படி விட்டுக் கொடுப்பது என இபிஎஸ் பேசியுள்ளார். அதற்கு, ”நீங்கள் செலவு செய்த பணம், கட்சியினுடையது தானே; வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்ததால்தான் தென் மாவட்டத்தில் வெற்றியை இழந்தோம்” என ஒபிஎஸ் பதிலளித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com