”ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எங்களை மன்னிக்க ராகுல் காந்தி யார்?” - சீமான் கேள்வி!

”ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எங்களை மன்னிக்க ராகுல் காந்தி யார்?” - சீமான் கேள்வி!

”ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எங்களை மன்னிக்க ராகுல் காந்தி யார்?” - சீமான் கேள்வி!

ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று ராகுல் காந்தி தனது தந்தையை நினைவு கூர்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. அவர் மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார். நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்.” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

இந்நிலையில் ராகுலின் பதிவு குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவரும் 400 கோடி பீரங்கி ஊழலில் சம்பந்தப்பட்டவர்தான். ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார் ராஜிவ் காந்தி. ராகுல் காந்தி தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க?

மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை கேவலமாக பார்க்கிறேன். திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பேரறிவாளன் விஷயத்தில் செய்தது என்ன என்று கூற முடியுமா? மேலும் இந்த போராட்டத்தில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான். அவரே சட்டங்களை படித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை தானே முடித்து வென்று உள்ளார். வழக்கறிஞர்கள் பிரபு மற்றும் பாரி இருவரும் தான் அவருக்காக வழக்கை முன்னெடுத்து சென்றார்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com